தமிழ்நாட்டில் எம்ஜிஆர் எப்படியோ? அப்படித்தான் ஆந்திராவில் என்டிஆர்! அவருக்கான செல்வாக்கின் மதிப்பு அளவிட முடியாதது. அவர் மறைந்து பல வருடங்களான நிலையிலும் இன்றும் ஆந்திராவில் என் டி ஆர் என்றதும் தேவுடு என்று கன்னத்தில் போட்டுக் கொள்ளும் அப்பாவி ரசிகர்கள் பலருண்டு. அப்படிப்பட்டவரின் வாழ்க்கையை பதிவு செய்யாமல் விட்டால் எப்படி என்ற ஆதங்கம் பிரபல இயக்குனரும், சர்ச்சைகளின் நாயகருமான ராம் கோபால் வர்மாவுக்கு வந்தது. அதன் விளைவாக அவர், என் டி ஆரின் வாழ்க்கைச் சித்திரத்தைப் படமாக்கவிருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். அறிவித்ததோடு அந்தப் படத்திற்கான ஒரு பாடலையும் ஷூட் செய்து வெளியிட்டார். அதற்கு என் டி ஆர் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பவே அப்போதைக்கு அந்தப் படம் கிடப்பில் போடப்பட்டது.
அப்போதைக்கு அடங்கிய பூதத்தை இப்போது மீண்டும் தட்டி எழுப்பியுள்ளார் ராம் கோபால் வர்மா. ஆமாம்... இப்போது புதிதாக 'என் டி ஆரின் லக்ஷ்மி’ என்ற பெயரில் புதிய திரைப்படமொன்றை எடுக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் என் டி ஆரின் அரசியல் வாழ்க்கை, அவரது இரண்டாவது மனைவியான லக்ஷ்மி பார்வதி உள்ளிட்ட விஷயங்கள் குறித்துப் பேசவிருக்கிறதாம். முதல் அறிவிப்பு அதிருப்தியைக் கிளப்பிய நிலையில் இந்த இரண்டாவது அறிவிப்பு நந்தமூரி குடும்பத்திலும் சரி, என் டி ஆர் ரசிகர்கள் மத்தியிலும் சரி, என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்று தெரியவில்லை?! படம் வெளி வந்தால் தெரியும் என்கிறார்கள் டோலிவுட்டில்.
Related Article
என்னுடைய கனவுகளும், நானும்! இயக்குனர் மிஷ்கின் பேட்டி!
கமல், அஜித், விக்ரம்? இயக்குனர் ஷங்கரின் அடுத்த ஹீரோ யார்?
தமிழில் ரீமேக் ஆகிறது கலக்கல் தெலுங்குப் படம் 'அர்ஜுன் ரெட்டி’
பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஓவியா! இன்று யார் வெளியேறுகிறார்கள்?
திருமணத்துக்கு யாரை எல்லாம் அழைத்துள்ளார் சமந்தா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


