கலை இயக்குனர் ஜி.கே மரணம்!

கலை இயக்குனர் ஜி.கே மரணம்!

'தங்கம்' சீரியல் வாயிலாக உலகத் தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் அறிமுகமானவராக மாறிப் போன கலை இயக்குனர் கோபி காந்த் எனும் ஜி.கே இன்று அதிகாலை 12.30 மணியளவில் சென்னையில் மரணமடைந்தார்.
Published on

சன் தொலைக்காட்சியின் 'தங்கம்' சீரியல் வாயிலாக உலகத் தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் அறிமுகமானவராக மாறிப் போன கலை இயக்குனர் கோபி காந்த் எனும் ஜி.கே இன்று அதிகாலை 12.30 மணியளவில் சென்னையில் மரணமடைந்தார்.

கடந்த சனிக்கிழமையன்று கடுமையான இருதயப் பிரச்னையின் காரணமாக சென்னை, கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் ஜி.கே. இன்று சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மறைந்த ஜி.கே வுக்கு வயது 60. அவருக்கு நாகவல்லி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.

ஜி.கே தீவிர ரஜினி ரசிகர். சூப்பர் ஸ்டாருடன் பாபா, அருணாச்சலம் உள்ளிட்ட திரைப்படங்களிலும், கமலுடன் அவ்வை ஷண்முகி திரைப்படத்திலும், விஜயுடன் சிவகாசி, திருப்பாச்சி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆயினும் ரம்யாகிருஷ்ணன் தயாரிப்பில் உருவான தங்கம் சீரியலின் குலசேகரன் கதாபாத்திரம் தான் ஜி.கே வை உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாக்கியது.

அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வளசரவாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com