சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

'ஜிமிக்கி கம்மல்' ஷெரிலுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது! (படங்கள்)

ஷெரிலுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பிரஃபுல் டாமி என்பவருடன் நிச்சயிக்கப்பட்டது குறித்து...

News image
Updated On :11 ஏப்ரல் 2018, 12:11 pm

எழில்

ஜிமிக்கி கம்மல் பாடல் மூலமாகப் புகழ்பெற்ற ஷெரிலுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

மோகன்லால் நடித்த வெளிபாடின்டெ புஸ்தகம் (Velipandinte Pusthakam) என்கிற மலையாளப்படத்தில் இடம்பெற்ற ‘என்டம்மேடெ ஜிமிக்கி கம்மல்’ என்கிற பாடலுக்கு கேரளாவின் ஐஎஸ்சி கல்லூரிப் பெண்கள் சிலர் ஆடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது. கேரளாவை விடவும் தமிழக இளைஞர்களிடையே இப்பாடலும் பெண்களின் நடனமும் அதிகக் கவனம் பெற்றது.

இப்பாடலின் வீடியோவில் நடனமாடிய அக்கல்லூரி ஆசிரியர்களான ஷெரில், அன்னா ஆகிய இருவரும் அதிகம் புகழடைந்தார்கள். இதனால் இவ்விருவரின் பேட்டிகளும் வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் அதிகமாக இடம்பெற்றன. இவர்களுக்குப் படவாய்ப்புகளும் வந்தன. சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெற்ற சொடக்கு மேல பாடலில் இடம்பெற்றார் ஷெரில்.

இந்நிலையில் ஷெரிலுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பிரஃபுல் டாமி என்பவருடன் நிச்சயிக்கப்பட்டது குறித்து ட்விட்டரில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார் ஷெரில். கேரளாவின் தொடுபுழாவில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.