

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை தமிழ் ரசிகர்களுக்கும் நல்ல பரிச்சயமுண்டு. தமிழில் விஜயைப் போல தெலுங்கில் அவரது நடன அசைவுகளுக்குப் பெருவாரியான ரசிகர்கள் உண்டு. டோலிவுட்டின் விரல் விட்டு எண்ணக்கூடிய இளம் டாப் டென் நடிகர்களில் அவரும் ஒருவர். அல்லு அர்ஜூனுக்கு பிரதமர் நரேந்திர மோடி என்றால் அவ்வளவு இஷ்டம். தனது திரைப்படங்களில் கூட மோடி கிரேஸை சில சந்தர்பங்களில் சூசகமாகக் காட்டக் கூடியவராக இருந்த அல்லு அர்ஜூன் மோடியின் ட்விட்டர் இணையதள விஐபி @ செலிப்ரிட்டி ஃபாலோயர்களில் ஒருவராகவும் இருந்து வந்தார். இதுநாள் வரை அப்படி இருந்தவர் இப்போது திடீரென இனிமேல் ட்விட்டரில் மோடியை அன் ஃபாலோ செய்வதென முடிவெடுத்து விட்டார். காரணம் மோடியின் மாற்றாந்தாய் மனப்பான்மை. தொடர்ந்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் மீது மோடியின் மத்திய அரசு பாரபட்சமாக நடந்து வருவது தனக்குப் பிடிக்காததாலும் ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தர மறுப்பதாலும் மோடியை அன்ஃபாலோ செய்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.