தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

சூர்யா, கார்த்தியின் முதல் படங்களைப் பார்த்து ஆசி கூறினார்: நடிகர் சிவக்குமார் உருக்கம்!

என் ஓவியங்களை பார்க்க 30 ஆண்டுகளுக்கு முன் எங்கள் இல்லம் வந்து 2 மணி நேரம் இருந்தார்...

News image
Updated On :8 ஆகஸ்ட் 2018, 5:30 am


திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி (94) செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் காலமானார்.

இதையடுத்து நடிகர் சிவக்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

1. பெரியார் , ராஜாஜிக்கு பிறகு  95 வயது வரை புகழோடு வாழ்ந்த அகில இந்திய அரசியல் தலைவர்  கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.

 2. பெரியார் - எந்த ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்துக்கு திட்டங்கள் தீட்டினாரோ அவற்றை கலைஞர் அவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்த உடனே நிறைவேற்றினார்.

3. அண்ணா அவர்கள் துவங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தை கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் கட்டிக்காத்தவர் .

4.  அரசியலில் சாதித்ததற்கு இணையாக - கலை இலக்கியத்திலும்  60 ஆண்டுகளுக்கு மேல்  சாதனை புரிந்தவர் .

5. 1950 களில்  தமிழ் சினிமாவில் நல்ல தமிழ் ஒலிக்க காரணமானவர்களில் முதன்மையானவர் .

6. குறளோவியம் , சங்கத்தமிழ், தொல்காப்பியப்பூங்கா - போன்றவை அவரது புலமைக்குச் சான்றானது .

7. பாசப்பறவைகள் , பாடாத தேனீக்கள் - அவர் வசனம் பேசி நடித்தேன் .

8. என் ஓவியங்களை பார்க்க 30 ஆண்டுகளுக்கு முன் எங்கள் இல்லம் வந்து 2 மணி நேரம் இருந்தார்.

9. சூர்யாவின் முதல் படம் நேருக்கு நேர் - கார்த்தி- முதல் படம் பருத்திவீரன் பார்த்து ஆசி கூறியவர் .

10. தமிழகத்தில் அவர் இடம் என்றும் காலியாகவே இருக்கும். 

அன்னாரது ஆத்மா சாந்தியடையவும் / பிரார்த்திப்பதோடு அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.