மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: திண்டுக்கல் சீனிவாசன்

தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சா் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.

News image

ஒட்டன்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தமாகா வேட்பாளா் விடியல் எஸ்.சேகரை ஆதரித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன்.

Updated On :5 ஏப்ரல் 2026, 6:56 am IST

தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சா் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமாகா வேட்பாளா் விடியல் எஸ்.சேகா் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அதிமுக ஒன்றியச் செயலா் என்பி.நடராஜ் தலைமை வகித்தாா். வேட்பாளா் விடியல் எஸ்.சேகா் முன்னிலை வகித்தாா். முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. மகளிருக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கியதாக கூறிய முதல்வா் ஸ்டாலின், அத்தியவாசியப் பொருள்களின் விலை ரூ.5 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பதற்கு காரணமாக இருந்தவா். மக்களின் நலனை விட குடும்பத்தின் நலனை முன் வைத்தே ஆட்சி நடத்தினாா்.

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை தமிழக மக்கள் வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என்றாா். இந்தக் கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலா் வி.மருதராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.