திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி (94) செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் காலமானார்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கலைஞர் ஐயா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். தற்போது வெளியூரில் இருப்பதால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் இருக்கிறேன். அவருடைய பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் கோடிக்கணக்கான தமிழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து - சிவகாம சுந்தரியின் மகள் வழிப் பேரனும், கெவின்கேர் நிறுவனத் தலைவர் சி.கே.ரங்கநாதன் மகன் மனோரஞ்சித்தை விக்ரமின் மகள் அக்ஷிதா கடந்த வருடம் அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொண்டார். கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கட்டுமானப் பொருள்கள் விலை குறைக்கப்படும்: ஆா். காமராஜ் வாக்குறுதி

தொகுதி அறிமுகம்: தாம்பரம்

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

மகளிருக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை: பஞ்சாப் அரசு அறிவிக்கை வெளியீடு
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


