திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

செக்கச் சிவந்த வானம்: நடிகர்களின் வேடங்களைக் குறிக்கும் போஸ்டர் வெளியீடு!

இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் குறித்த போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன... 

News image
Updated On :17 ஆகஸ்ட் 2018, 7:26 am

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் போன்றோர் நடிக்கிறார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. 

இந்தப் படம்  செப்டம்பர் 28 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 13 அன்று சீமராஜா-வும் செப்டம்பர் 20 அன்று சாமி 2-வும் செப்டம்பர் 27 அன்று என்னை நோக்கி பாயும் தோட்டாவும் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் 28 அன்று செக்கச் சிவந்த வானம் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் குறித்த போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. அடுத்ததாக நடிகைகளின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.