கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அஜித்தின் அடுத்த இரு படங்கள்: வெளியீட்டுத் தேதிகள் அறிவிப்பு!

பிங்க் படத்தை ரீமேக் செய்யலாம் என்கிற விருப்பத்தை அஜித் தெரிவித்தார். அஜித்துடனான அடுத்தப் படம்...

News image
Updated On :15 டிசம்பர் 2018, 5:09 am

எழில்

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குகிறார். இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகவுள்ளது. அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படம் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. அஜித் - வினோத் கூட்டணியில் உருவாகும் படம் மே 1, 2019-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. இப்படத்துக்கான பூஜை நிகழ்வின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

சிவா இயக்கத்தில் நடித்த வீரம் படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார் அஜித். அதற்குப் பிறகு வேதாளம் படத்தில் தொடங்கி விஸ்வாசம் வரை தொடர்ந்து சிவா இயக்கிய மூன்று படங்களில் நடித்துள்ள அஜித், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதாவது, என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு சிவா அல்லாத மற்றொரு இயக்குநருடன் கைகோத்துள்ளார். இதனால் அஜித் - வினோத் என்கிற புதிய கூட்டணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மேலும் இந்தப் படத்துக்குப் பிறகு போனி கபூரின் அடுத்தப் படத்திலும் கதாநாயகனாக அஜித் நடிக்கவுள்ளார். அந்தப் படம் ஏப்ரல் 10, 2020-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்தபோது நாங்கள் தயாரிக்கும் தமிழ்ப் படத்தில் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி, பிங்க் படத்தை ரீமேக் செய்யலாம் என்கிற விருப்பத்தை அஜித் தெரிவித்தார். அஜித்துடனான அடுத்தப் படம் ஜூலையில் ஆரம்பிக்கும். இரு படங்களையும் ஜீ நிறுவனம் ஆதரவளிக்கும் என்று போனி கபூர் கூறியுள்ளார்.

Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.