எதிர்மறை விமரிசனங்கள் எதிரொலி: சீதக்காதி படத்தின் நீளம் குறைப்பு!
படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடுவது அலுப்பாக இருக்கிறது. கதையை மிகவும் இழுத்திருக்கிறார் இயக்குநர் என்று...


2 மணி நேரம் 53 நிமிடங்கள். இதுதான் சீதக்காதி படத்தின் முழு நீளம்.
ஆனால் விஜய் சேதுபதி முதல் அரை மணி நேரங்களுக்கு மட்டுமே வருகிற ஒரு படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடுவது அலுப்பாக இருக்கிறது. கதையை மிகவும் இழுத்திருக்கிறார் இயக்குநர் என்று படம் வெளிவந்த பிறகு விமரிசனங்கள் வந்தன. இதனால் பல திரையரங்குகளில் சீதக்காதியின் காட்சிகளும் குறைக்கப்பட்டு 2.0, அடங்க மறு, கனா படங்களுக்கு அதிகக் காட்சிகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து மக்களின் விமரிசனங்களுக்கு மதிப்பளித்து படத்தின் நீளம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீதக்காதி படத்தின் நீளம் தற்போது 2 மணி 30 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளதால் இனிமேல் படம் பார்க்கும் பார்வையாளர்கள் படம் தொய்வாகச் செல்வதாக உணரமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் - சீதக்காதி. இசை - கோவிந்த் வசந்தா. விஜய் சேதுபதி நடித்த ஜுங்கா, செக்கச் சிவந்த வானம், 96 ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகின. இதையடுத்து சீதக்காதி படம் வெளிவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...