முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

டீசர் பார்த்தவர்கள் படம் பார்த்தாலே போதும்... லாபம் கிடைத்து விடும்: இயக்குநர் சேரனின் புதிய கணக்கு!

அத்தனை பேரும் தியேட்டர்ல படம் பாத்துட்டாலே முதலீடு பண்ண பணமும் லாபமும் தயாரிப்பாளருக்கு...

News image
Updated On :25 டிசம்பர் 2018, 12:03 pm IST

பாரதி கண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப், பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து உள்ளிட்ட தனது படைப்புகளால் தமிழ் ரசிகர்களின் வெகுவான ஆதரவைப் பெற்றவர் இயக்குநர் சேரன். சொந்த பிரச்னைகள் மற்றும் கடைசியாக இயக்கிய ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் ஏற்பட்ட வியாபார நஷ்டம் ஆகியவற்றால் சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் படம் இயக்க வந்துள்ளார். 

சுமார் 4 வருடங்களுக்குப் பின் சேரன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்துக்கு திருமணம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. உமாபதி, கவிதா சுரேஷ், தம்பி ராமையா, மனோபாலா, ஜெயப்பிரகாஷ், சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இவர்களோடு சேரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதைப் பலரும் சமூகவலைத்தளங்களில் வழியாகப் பார்த்துள்ளார்கள். இதற்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சேரன் தெரிவித்துள்ளதாவது:

திருமணம் முன்னோட்டம் இதுவரை பார்த்தவர்கள் 6,50,000 பேர்... அத்தனை பேரும் தியேட்டர்ல படம் பாத்துட்டாலே முதலீடு பண்ண பணமும் லாபமும் தயாரிப்பாளருக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.. நன்றி மக்களே என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.