அழகும் ரசனையும்: சமூகவலைத்தளங்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ள சில்லுக் கருப்பட்டி டீசர்!
கடைசியாக ஓர் அழகான, ரசனையான தமிழ்ப்பட டீசரை எப்போது பார்த்தீர்கள்...


கடைசியாக ஓர் அழகான, ரசனையான தமிழ்ப்பட டீசரை எப்போது பார்த்தீர்கள்?
இயக்குநர் ஹலிதா ஷமீமின் சில்லுக் கருப்பட்டி டீசர் அந்த உணர்வை நிச்சயம் தரும். சமீபத்தில் வெளியாகியுள்ள இந்த டீசருக்குச் சமூகவலைத்தளங்களில் அதிகப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. விஜய் சேதுபதி, ஆர்யா, இயக்குநர் பா. இரஞ்சித் ஆகியோர் டீசரைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்கள். ஹலிதா இதற்கு முன்பு, பூவரசம் பீப்பீ படத்தை இயக்கியிருந்தார். மின்மினி என்கிற படத்தையும் அவர் இயக்கி வருகிறார்.
சில்லுக் கருப்பட்டி, நான்குக் கிளைக் கதைகள் கொண்ட படம் என்பதால் மனோஜ் பரமஹம்ஸா, அபிநந்தன், விஜய் கார்த்திக், யாமினி என நான்கு பேர் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். இசை - பிரதீப் குமார். சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்சன், காலா மணிகண்டன், நிவேதிதா, சாரா அர்ஜூன் போன்றோர் நடித்துள்ளார்கள்.

ஹலிதா ஷமீம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...