நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காலா, வட சென்னை படங்களின் பின்னணி இசை குறித்து சந்தோஷ் நாராயணன் பதிவு!

இரு படங்களின் பிண்ணனி இசைக்கான பணிகளைத் தொடங்கியுள்ள சந்தோஷ் நாராயணன், அதுகுறித்து ட்விட்டரில்...

News image
Updated On :8 பிப்ரவரி 2018, 6:59 am

எழில்

2.0 படத்தையடுத்து பா. இரஞ்சித் இயக்கத்தில் காலா என்கிற படத்தில் நடித்துள்ளார் ரஜினி. நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. இதற்கு முன்பு ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானா படேகர், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

வெற்றிமாறன் இயக்கி வரும் வடசென்னை படத்தில் தனுஷ், அமலா பால் போன்றோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை மூன்று பாகமாக எடுக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். 

இந்த இரு பெரிய படங்களுக்கும் இசை - சந்தோஷ் நாராயணன். இரு படங்களின் பிண்ணனி இசைக்கான பணிகளைத் தொடங்கியுள்ள சந்தோஷ் நாராயணன், அதுகுறித்து ட்விட்டரில் எழுதியுள்ளதாவது:

காலா மற்றும் வட சென்னை ஆகிய இரு படங்களின் பின்னணி இசைப் பணிகளில் முழு சுதந்தரத்தையும் அளித்து என் இசை உணர்வுகளை வெளிப்படுத்த உதவியதற்காக பா. இரஞ்சித், வெற்றிமாறன், தனுஷ் ஆகியோருக்கு நன்றிகள். மிகச்சிறந்த படங்களுக்கான பின்னணி இசையை உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறேன். இதுகுறித்த விவரங்களை விரைவில் வெளியிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.