கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்கிற நிகழ்ச்சி மூலமாகத் தனக்கான துணையைத் தேர்வு செய்ய களமிறங்கியுள்ளார் நடிகர் ஆர்யா. இந்த நிகழ்ச்சி நேற்று முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் 16 பெண்களில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்யவுள்ளார்.
ஆர்யாவின் இந்த முயற்சிக்கு அவருடைய நெருங்கிய நண்பர்களும் திரையுலகப் பிரபலங்களும் ஆதரவும் வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரம் ட்விட்டரில் வெளியானது. இதைப் பார்த்த நகைச்சுவை நடிகர் சதீஷ் கூறியதாவது:
ஆர்யா டார்லிங், சும்மாவே இததான் செஞ்சிட்டு இருந்தீங்க. இப்போ இதுக்கு காசு வேற கொடுக்கறாங்க என்று கிண்டலாக ட்வீட் எழுதினார்.
அதற்குப் பதிலளித்த ஆர்யா, பிரதர், அடுத்த சீசனுக்கு உங்கள் பெயரைப் பரிந்துரைத்துள்ளேன். எனவே அதற்கான பயிற்சியை இப்போதே ஆரம்பியுங்கள் என்றார். உடனே சதீஷும், அடுத்த சீசன் எப்போது ஆரம்பமாகிறது என்று பதில் அளித்து இந்த சுவாரசியமான உரையாடலை நிறைவு செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே.வங்கத்தில் 15 ஆண்டுகளில் முதல்முறையாக ஆட்சியை இழக்கும் மமதா?
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai

5 மாநில பேரவைத் தேர்தல்! கருத்துக் கணிப்பு முடிவுகள் - முழு விவரம்!
பெங்களூரில் கடும் மழை! 7 பேர் பலி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


