ரகுல் பிரீத் சிங்கா அப்படிச் சொன்னார்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ரகுல் ப்ரீத் சிங் டோலிவுட்டின் மனம் கவர்ந்த நாயகி. அவர் நடிப்பில் வெளிவந்த ஸ்பைடர் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்கள் அவரை டாப் நடிகைகளின் பட்டியலில் உடனடியாக இணைத்துவிட்டது.
ரகுல் பிரீத் சிங்கா அப்படிச் சொன்னார்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Updated on
2 min read

ரகுல் ப்ரீத் சிங் டோலிவுட்டின் மனம் கவர்ந்த நாயகி. அவர் நடிப்பில் வெளிவந்த ஸ்பைடர் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்கள் அவரை டாப் நடிகைகளின் பட்டியலில் உடனடியாக இணைத்துவிட்டது.

அப்போது அவர் அளித்த பெட்டியில் 'திரைப்பட உருவாக்கம் என்பது ஒட்டுமொத்த படக்குழுவினரின் கூட்டு முயற்சி. வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் அது ஒருவரைச் சார்ந்தது மட்டுமல்ல. என்னளவில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு தேவையான பங்களிப்பை செய்துவிடுவேன். பல படங்களில் ஹீரோயின் ஒரு பதுமை போலத் தான் பயன்படுத்தப்படுகிறார்கள்.

சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இந்தப் பிரச்னை உள்ளது. காரணம் இன்னும் ஆணாதிக்கம் மிகுந்த உலகம் தான் இது. ஆனால் தற்போது சூழல் மாறிவருகிறது. பெண் மையப் படங்கள் அடிக்கடி வருவதில்லையென்றாலும் அவ்வப்போது வெளிவருகிறது. பாலிவுட்டில் இந்த விஷயத்தில் பரவாயில்லை. வித்யாபாலன் பல படங்களில் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். 

பாலிவுட்டில் குயின், சிம்ரன் போன்ற படங்களில் பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ரசிகர்களின் கவனத்தையும் பாராட்டுதல்களையும் பெற்றன. தமிழில் நயன்தாரா, அனுஷ்கா தங்கள் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகின்றனர். 

நான் சமீபத்தில் நடித்த படங்கள் ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள். நாயகியை முன்னணியில் வைத்துத்தான் படம் எடுக்கவேண்டும் என்று நான் கூறவில்லை. ஹீரோவுக்குத் தரப்படும் பிரதான பாத்திரத்தில் சரி சமமாக இருந்தால் கூட எங்களுக்குப் போதும். அத்தகைய மாற்றத்தை நோக்கி தான் திரை உலகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்' என்று அந்தப் பேட்டியில் கூறியிருந்தார் ரகுல்.

இந்நிலையில் அண்மையில் 'மேக்ஸிம்' என்ற ஆங்கில புத்தகத்தின் அட்டை படத்தில் ரகுலின் க்ளாமர் படங்கள் வெளியாகி இணையம் முழுவதும் வைரலாகி வருகின்றது. அவரது புகைப்படங்களைப் பார்த்து அதிர்ந்த சில ரசிகர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இது குறித்து ரகுலிடம் கேட்ட போது, 'மேக்ஸிம் உலகப் புகழ்ப் பெற்ற ஒரு மேகஸின். அதன் அட்டைப் பட வாய்ப்பு என்பது எளிதில் கிடைத்துவிடக் கூடிய ஒன்றல்ல.

கோலிவுட், டோலிவுட்டில் தான் நான் இத்தகைய போஸ் கொடுத்திருக்கிறேன் என்று விமரிசிக்கிறார்கள். புதுப் பட வாய்ப்புக்காக இப்படி செய்கிறேன் என்றும் கூறி வருகிறார்கள். ஆனால் இதில் உண்மையில்லை. இது போன்று புகழ்ப் பெற்ற பத்திரிகைகளின் அட்டைப் படங்களில் இடம் பெறுவது பாலிவுட்டில் பெரிய வி‌ஷயமே இல்லை. இதற்கு முன் பாலிவுட்டிலிருந்து பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல நடிகைகள் மாக்ஸிம் அட்டைப் படத்தை அலங்கரித்துள்ளனர். 'அய்யாரி' (Aiyaary) என்ற இந்தி படத்தில் நான் நடித்துள்ளேன். அதனால் இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.’ என்று கூறினார். 

ரகுல் பிரீத்தின் இந்த பதிலடி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன் த்ரிஷா, ஸ்ரேயா, ஸ்ருதி ஹாசன்,  காஜல் அகர்வால், டாப்ஸி பன்னு ஆகியோர் மாக்ஸிம் பத்திரிகையின் அட்டைப் படத்தில் இடம் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com