ஊடக அலட்சியத்தால் தனது புகைப்படம் தவறுதலாகப் பயன்படுத்தப் பட்டதற்கு பாடகர் ஸ்ரீனிவாஸ் கண்டனம்

பாடகர் ஸ்ரீனிவாஸின் புகைப்படத்தை இப்படித் தவறுதலாகப் பயன்படுத்துவது இது முதல்முறை இல்லை.  முன்பே, பழம்பெரும் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் மறைந்த போதும் கூட இப்படித்தான் தவறுதலாக அவருக்குப் பதிலாக
ஊடக அலட்சியத்தால் தனது புகைப்படம் தவறுதலாகப் பயன்படுத்தப் பட்டதற்கு பாடகர் ஸ்ரீனிவாஸ் கண்டனம்

கடந்த வாரம் ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்குப் பாடகர் ‘கஜல் ஸ்ரீனிவாஸ்’ பாலியல் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்தச் செய்தியை ஊடகங்களில் பிரசுரிக்கும் போது ஒரு குறிப்பிட்ட இணைய ஊடகம், கஜல் ஸ்ரீனிவாஸின் புகைப்படத்துக்குப் பதிலாக பிரபல தமிழ்த் திரைப்பட பாடகரும், கர்நாடக இசைக்கலைஞருமான படையப்பாவின் ‘மின்சாரப்பூவே’ பாடல் புகழ் ஸ்ரீனிவாஸின் புகைப்படத்தை தவறுதலாகப் பயன்படுத்தி விட்டது.

பாடகர் ஸ்ரீனிவாஸின் புகைப்படத்தை இப்படித் தவறுதலாகப் பயன்படுத்துவது இது முதல்முறை இல்லை.  முன்பே, பழம்பெரும் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் மறைந்த போதும் கூட இப்படித்தான் தவறுதலாக அவருக்குப் பதிலாக ஸ்ரீனிவாஸின் புகைப்படத்தைப் போட்டு இரங்கல் செய்தி வெளியிட்டு விட்டனர் சில ஊடகத்தினர். இதைக் கண்டு கொதித்துப் போன பாடகர் ஸ்ரீனிவாஸ், ஊடகத்தினரின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து தனது கண்டனத்தை ட்விட்டரில் பதிவிட்டதோடு காவல்துறையிலும் புகாராக அளித்துள்ளார்.

ஒரு செய்தியை வெளியிடும் முன்பாக, அதில் சொல்லப்பட்ட விஷயங்கள், பயனப்டுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் குறித்த குறைந்த பட்ச ஞானம் கூட இன்றி பரபரப்புக்காகவும், விஷயங்களை முந்தித் தருவதற்காகவும் சிலர் பொய்யான விஷயங்களைச் செய்தியாக்குவது தனது பிரபலத் தன்மையைக் குறைப்பதாகவும், புகழுக்குக் களங்கம் விளைவிப்பதாகவும் இருப்பதாக ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார்.

அவரது கண்டனத்தைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட இணைய ஊடகம், உடனடியாக தவறுதலாக வெளியிடப்பட்ட புகைப்படத்தை நீக்கியதோடு, தங்களது தவறுக்காக பாடகரிடம் ட்விட்டரில் மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அச்சு ஊடகமோ, இணைய ஊடகமோ எந்த ஊடகமாக இருந்தாலும் இம்மாதிரியான தவறுகள் பிரபலங்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக அமைந்து விடுவதால் செய்திகளைப் பதிவிடும் போது மிகுந்த கவனத்துடனும், பொறுப்புணர்வுடனும் இருக்க வேண்டியது அவசியம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com