மக்களிடமிருந்து பணம் வசூலிப்பது ஏன்?: மலேசியாவுக்கு அஜித் வர மறுத்ததின் பின்னணி!
மக்களிடமிருந்து பணம் வசூலிப்பதை அஜித் விரும்பவில்லை...


நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலர் பதவியிலிருந்து எஸ்.வி. சேகர் ராஜிநாமா செய்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நடிகர் சங்கக் கட்டடத்துக்கு மக்களிடமிருந்து பணம் வசூலிப்பதை அஜித் விரும்பவில்லை. மலேசியாவில் நடைபெற்ற கலைவிழாவுக்கு அஜித்தை அழைத்தபோது ஏற்கெனவே மக்கள் சினிமா டிக்கெட்டுக்கு அளிக்கும் பணத்தில்தான் நிறைய சம்பாதிக்கிறோம். அதனால் நடிகர் சங்கக் கட்டடத்துக்கு மக்களிடமிருந்து பணம் வாங்காமல் நாமே பணம் போட்டுக் கட்டலாம் என்றார். அதனால்தான் அவர் மலேசியாவில் நடைபெற்ற கலைவிழாவில் கலந்துகொள்ளவில்லை என்று எஸ்.வி. சேகர் தகவல் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகர்கள் ரஜினி, கமல் உள்பட 100-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். விஜய், அஜித் இவ்விழாவில் கலந்துகொள்ளவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...