சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கத்தி, துப்பாக்கி படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணையவுள்ளது. இதற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்தப்படத்தில் விஜயுடன் கீர்த்தி சுரேஷ் மீண்டும் ஜோடி சேர்க்கிறார். அத்துடன் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன் மற்றும் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஜனவரி 19-ம் தேதி அன்று சென்னையில் துவங்கியது. தற்போது ஈசிஆரில் 100க்கும் மேற்பட்ட படகுகளைக் கொண்டு படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இப்படத்திற்கு தமிழின் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசன எழுத உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயமோகன் இதற்கு முன்னதாக அங்காடித் தெரு, நீர்ப்பறவை, கடல், ஏமாலி மற்றும் 2.0 உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில், முதன் முறையாக ஜெயமோகன் சேர உள்ளதால், படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யோகி பாபுவின் 300 ஆவது படம்! அர்ஜுனன் பேர் பத்து வெளியீட்டுத் தேதி!

கடவுச்சீட்டு கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசு!

பயணம் தாமதமாகும்! திருச்சியில் புறவழிச் சாலை காவிரிப் பாலம் மூடப்பட்டது!
சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



