சூப்பர் சிங்கர் 6-ம் சீஸனில் பாவனா இல்லையா? என்ன காரணம்?

சின்னத்திரையை வண்ணத் திரையாக்கி ஒவ்வொரு நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து
சூப்பர் சிங்கர் 6-ம் சீஸனில் பாவனா இல்லையா? என்ன காரணம்?
Published on
Updated on
1 min read

சின்னத்திரையை வண்ணத் திரையாக்கி ஒவ்வொரு நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்குபவர்கள்தான் விஜெ என்று சுருக்கமாக அழைக்கப்படும் விடியோ ஜாக்கிகள். இந்த தொகுப்பாளினிகளின் பங்களிப்பு கடந்த சில வருடங்கள் அந்தந்த சானல்களுக்கு மட்டுமின்றி அவர்களுக்கு தனிப்பட்ட புகழையும் தந்துள்ளது. ஆனந்த கீதன், ஜேம்ஸ் வசந்தன், பெப்ஸி உமா, சொர்ணமால்யா, விஜய் ஆதிராஜ், மகாலட்சுமி, மோனிகா, கோபிநாத் சிவகார்த்திகேயன், மா.கா.பா.ஆனந்த், டிடி, ரம்யா, ப்ரியங்கா, பாவனா  என்று பலரைச் சொல்லலாம்.

சின்னத்திரையிலிருந்து சிலர் வெள்ளித் திரைக்கு இடம்பெயர்வதும், ஒரு சானலிலிருந்து இன்னொரு சானலுக்கு வேலை மாறுவதும், அல்லது திருமணம் முடிந்து தொலைக்காட்சிக்கு குட்பை சொன்ன சம்பவங்களும் உண்டு. சின்னத்திரை தொகுப்பாளர்களை மக்கள் அதிகமாக நேசிக்கக் காரணம் அவர்களை தினந்தோறும் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளில் பார்த்து ரசிப்பதால் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே அவர்களை ரசிகர்கள் நினைக்கிறார்கள். தொலைக்காட்சி நம்முடைய வாழ்க்கையிலிருந்து நீக்க முடியாத அளவிற்கு ஒன்றிணைந்துவிட்ட சக்திவாய்ந்த ஊடகம் என்பது உண்மைதானே?

விஜய் டிவியில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி பெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி  அனைத்துத் தரப்பு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்ததற்கு அதன் தொகுப்பாளர்களும் ஒரு முக்கிய காரணம் எனலாம். பிரியங்கா, பாவனா, டிடி, மா.கா.பா ஆனந்த் ஆகியோரின் நகைச்சுவையும் இந்நிகழ்ச்சியில் கவனம் பெற்றது என்பது அனைவரும் ஒப்புக் கொள்ளும் விஷயம். இந்நிலையில் விரைவில் இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீஸன் தொடங்கவுள்ளது.

ஆனால் முதல் ஐந்து பகுதிகளை தொகுத்து வழங்கிய பாவனா, சூப்பர் சிங்கர் 6-வது சீசனில் கலந்து கொள்ளவில்லை என்று தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.  இசை பாரம்பரியத்தைச் சேர்ந்த தனக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கடந்த ஆறு வருடங்களாக ஐந்து சீஸன்களில் தொடர்ந்து பங்கு பெற்றது மகிழ்ச்சியான விஷயம். ரசிகர்களின் அன்பும், ஆதரவும் கிடைத்தது பெரும் பேறு என நினைக்கிறேன். என் மீது அன்பைப் பொழிந்த அனைவருக்கும் என் உள்ளார்ந்த நன்றிகள். விரைவில் தொடங்கவிருக்கும் சூப்பர் சிங்கர் 6-ம் சீஸனில் நான் பங்கேற்கவில்லை. என்னுடைய ஆதரவு எப்போதும் அந்நிகழ்ச்சிக்கு உண்டு. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!’ என்று பாவனா  அந்த டிவிட்டரில் தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com