தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

விஜய் படத்திற்கு வசனம் எழுதுகிறாரா எழுத்தாளர் ஜெயமோகன்? 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published On :

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கத்தி, துப்பாக்கி படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணையவுள்ளது. இதற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்தப்படத்தில் விஜயுடன் கீர்த்தி சுரேஷ் மீண்டும் ஜோடி சேர்க்கிறார். அத்துடன் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன் மற்றும் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஜனவரி 19-ம் தேதி அன்று சென்னையில் துவங்கியது. தற்போது ஈசிஆரில் 100க்கும் மேற்பட்ட படகுகளைக் கொண்டு படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இப்படத்திற்கு தமிழின் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசன எழுத உள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. ஜெயமோகன் இதற்கு முன்னதாக அங்காடித் தெரு, நீர்ப்பறவை,  கடல், ஏமாலி மற்றும் 2.0 உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில், முதன் முறையாக    ஜெயமோகன் சேர உள்ளதால், படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.