‘பத்மாவத் டு கல்லி பாய்ஸ்’ மீம்ஸ்களால் ட்விட்டரைக் கலக்கும் ரண்வீர் சிங்கின் உருமாற்றம்!

ரண்வீர் சிங்கின் இந்த உருமாற்றத்தைக் கலாய்த்து ட்விட்டர் வாசிகள் மீம்ஸ்களால் நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் சிலவற்றைப் பாருங்கள்...
‘பத்மாவத் டு கல்லி பாய்ஸ்’ மீம்ஸ்களால் ட்விட்டரைக் கலக்கும் ரண்வீர் சிங்கின் உருமாற்றம்!
Published on
Updated on
2 min read

ரண்வீர் சிங், தீபிகா படுகோன் இணைந்து நடித்த  ‘பத்மாவத்’ திரைப்படம் படப்பிடிப்பு தொடங்கிய நாட்கள் முதலே சர்ச்சைக்குரிய படமெனக் கருதி பெருத்த கலகங்கள் வெடித்துக் கொண்டிருந்தன. ஒருவழியாக எதிர்ப்பை மீறி நீதிமன்றமே படத்தை வரும் ஜனவரி 26 ஆம் தேதி படத்தை வெளியிட ஒப்புதல் அளித்த பின்னும் அப்படத்துக்கான எதிர்ப்புகள் இன்னும் குறைந்தபாடில்லை. மன்னர்கள், அரசிகள் மற்றும் தலைவர்களின் நிஜ வாழ்க்கையைத் திரைப்படமாக்கும் போதெல்லாம் இத்தகைய சர்ச்சைகள் வெடிக்காமல் இருப்பதில்லை. அதனால் அதைப் பற்றியெல்லாம் யோசித்துக் கொண்டு நேரத்தை விரயமாக்க முடியுமா என்ன? இதோ அத்திரைப்படத்தின் நாயகனும் படத்தில் அலாவுதீன் கில்ஜியாக நடித்தவருமான ரண்வீர் சிங், கில்ஜிக்காக தான் ஏற்றியிருந்த உடல் எடையைச் சிக்கெனக் குறைத்து அடுத்து தான் நடிக்கவிருக்கும் கல்லி பாய்ஸ் திரைப்படத்துக்காக சுக்குப் போல காய்ந்து வற்றி வேறொரு மனிதராக மாறி வந்திருக்கிறார்.

இந்த உருமாற்றத்தை அவர் தான் மட்டும் ரசிக்காமல் தனது ரசிகர்களும் ரசித்து மகிழட்டும் என ட்விட்டரில் பதிவிட. தற்போது ரண்வீர் சிங்கின் இந்த உருமாற்றத்தைக் கலாய்த்து ட்விட்டர் வாசிகள் மீம்ஸ்களால் நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் சிலவற்றைப் பாருங்கள்... நிச்சயம் உங்களால் சிரிப்பை அடக்க முடியாது.

ட்விட்டர் மீம்ஸ் 1...

முதல் புகைப்படம் மாத ஆரம்பத்தில் கும்மென்று கனக்கும் பர்ஸ் , இரண்டாம் புகைப்படம் மாத இறுதியில் சப்பென இளைத்துத் துவண்டு விட்ட பர்ஸ்...

மீம்ஸ் 2...

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இந்திய கிரிக்கெட்டின் செயற்கரிய செயல்கள் எப்படிப்பட்டவையாக இருந்தன என்பதை ரண்வீரின் உருமாற்றப் புகைப்படத்தை கொண்டு ஹாஸ்யத்துடன் விவரிக்கிறது இந்த மீம்ஸ்

மீம்ஸ் 3...

ரண்வீரின் மனநிலை பத்மாவத் பற்றிப் பேசுகையில் இப்படி மாறிவிடுகிறதாம்...

மீம்ஸ் 4...

சமூக இணையதளங்களில் எதற்கெடுத்தாலும் போர் அறிவித்து விமர்சனக் கணைகளால் குதறித் தள்ளி னேரில் அகப்படுகையில் மாத்திரம் அப்பாவித் தோற்றம் காட்டும் நெட்டிஸன்களைக் கலாய்க்கிறது இந்த மீம்ஸ்.

மீம்ஸ் 5...

ரண்வீரின் ஒரிஜினல் ட்விட்டர் ஸ்டேட்மெண்ட்...

இதைத்தான் நெட்டிஸன்கள் மேலே சொன்னபடியெல்லாம் கலாய்த்திருக்கிறார்கள்.

சரிதான் இவர்கள் எதைத்தான் கலாய்க்காமல் விட்டார்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com