ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மன்னர் வகையறா படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துள்ள ஜூலி!

அனைவரும் படத்தைப் பார்த்து ஆதரவு தெரிவிக்கவும் என்று கூறியுள்ளார்..

News image
Updated On :25 ஜனவரி 2018, 9:04 am

எழில்

பூபதி பாண்டியன் இயக்கியுள்ள மன்னர் வகையறா படத்தில் விமல், ஆனந்தி, சாந்தினி தமிழரசன், ரோபோ சங்கர், பிரபு, சரண்யா போன்றோர் நடித்துள்ளார்கள். ஏ3வி சினிமாஸ் சார்பில் நடிகர் விமல் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் பிக் பாஸ் புகழ் ஜூலியும் நடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

மன்னர் வகையறா படத்தின் வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறேன். நான் அறிமுகமாகும் படம். கெளரவ வேடத்தில் நடித்துள்ளேன். அனைவரும் படத்தைப் பார்த்து ஆதரவு தெரிவிக்கவும் என்று கூறியுள்ளார். 

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்று, கோஷங்கள் மூலம் அரசியல்வாதிகளை விமரிசனம் செய்து புகழ்பெற்றவரான ஜூலி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளராகக் களமிறங்கினார். ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்ற சமயத்தில் இவருடைய கோஷங்கள் வீடியோக்களாக சமூகவலைத்தளங்கில் அதிகம் பகிரப்பட்டன. அப்போது, வீரத்தமிழச்சி என்கிற பட்டமும் ரசிகர்களால் அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அவர் அறிமுகமானது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. அந்த நிகழ்ச்சியில் திடீரென ஓவியாவுக்கும் ஜூலிக்கும் இடையே கருத்து மோதல் உண்டானதால் ரசிகர்களின் ஆதரவை இழந்த ஜூலி, பிறகு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக, கலைஞர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றியவர், தற்போது திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.