நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

நான்காவது முறையாக ஜோதிகாவுடன் இணையும் சிம்பு 

மன்மதன், சரவணா மற்றும் செக்கச் சிவந்த வானம் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக...

News image
Updated On :9 ஜூலை 2018, 10:55 am IST

சென்னை: மன்மதன், சரவணா மற்றும் செக்கச் சிவந்த வானம் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக ஜோதிகாவுடன் இணைந்து சிம்பு நடிக்க உள்ளார். 

சிம்பு மற்றும் ஜோதிகா ஜோடி முதன்முறையாக ‘மன்மதன்’ திரைப்படத்தில் நடித்தனர். பிறகு சரவணா படத்தில் இணைந்து நடித்தார்கள். அதைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர்கள் இருவரும் தற்பொழுது மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி இசை கோர்ப்பு மற்றும் பிற வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நான்காவது முறையாக ஜோதிகாவுடன் இணைந்து சிம்பு நடிக்க உள்ள தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `தும்ஹரி சூளு' படத்தின் தமிழ் ரீமேக் 'காற்றின் மொழி' என்ற பெயரில் உருவாகி வருகிறது. ராதா மோகன் இயக்கும் இந்தப் படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடிக்கிறார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருக்கிறார் சமீபத்தில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், அதுதொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.