வில் ஸ்மித் குடும்பம் ஒன்னா சேர்ந்த நேரம்...

கடந்த 1997 ஆம் ஆண்டு திருமண வாழ்வில் இணைந்த வில்ஸ்மித், ஜெடா தம்பதிக்கு மூன்று வாரிசுகள்.
வில் ஸ்மித் குடும்பம் ஒன்னா சேர்ந்த நேரம்...
Published on
Updated on
2 min read

உலகத்தில் இப்படி ஒரு குடும்பத்தை நீங்கள் கண்டதுண்டோ! அப்பாவும் மகன்களும் ஒரு பக்கம் உலகத்தின் வெவ்வேறு நாடுகளின் ஷூட்டிங்குகளில் பிஸி, அம்மாவும், பொன்னும் கூட உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் ஃபேஸ்புக் சீரிஸ் விடியோ ஷூட்டிங்குகளில் பிஸியோ பிஸி. ஆளுக்கொரு மூளையில் கர்மமே கண்ணாக எத்தனை நாட்களுக்குத் தான் சுற்றிக் கொண்டிருக்க முடியும். என்றாவது ஒருநாள் எல்லோரும் ஓரிடத்தில் ஒன்றாகக் கூடி ஓய்வாக கதைகள் பேசிக் களிக்க வேண்டும் என்று தோன்றாதா? தோன்றாமல் என்ன தோன்றத்தான் செய்யும். ஆனால், இந்த அவசர உலகில் ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’ எனும் பழமொழிக்கேற்ப வில்ஸ்மித் குடும்பத்துக்கு வரவேற்பு ஏகத்துக்கும் இருப்பதால் அவரவர் வேலைகளை ஒதுக்கி வைத்து சிறு இடைவெளி உண்டாக்கி இப்படி குடும்பமாகக் கூடிக் களிப்பது கொஞ்சம் சிரமம் தான்.

ஆனாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை வில்ஸ்மித். இதோ இத்தாலியன் கெட் அவேயில் மொத்தக் குடும்பமும் திரண்டதோடு தங்களது கொண்டாட்டக் கோலாகல மனநிலையை புகைப்படங்களாகச் சுட்டுத்தள்ளி சமூக ஊடகப் பக்கங்களையும் குளிரவைத்துள்ளது. கடந்த 1997 ஆம் ஆண்டு திருமண வாழ்வில் இணைந்த வில்ஸ்மித், ஜெடா தம்பதிக்கு மூன்று வாரிசுகள். வில்ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித்தை கராத்தே கிட் திரைப்படம் வாயிலாக உலகம் முழுக்க நல்ல பரிச்சயம் உண்டு. வில்ஸ்மித்தின் மனைவி ஜெடாவும், மகளும் இணைந்து ஃபேஸ்புக்கில் ஃபேஸ்புக் சீரிஸ் என்றொரு பாப்புலர் தொடரை வழங்கி வருகிறார்கள்.

ஜேடன் ஸ்மித் தன் தந்தையுடன் இணைந்து சர்வதேச ஃபுட்பால் டோர்னமெண்ட்டின் live it up பாடலைப் பாடியுள்ளார். இவர்கள் எல்லோரும் ஆளுக்கொரு திசையில் தங்களது தொழிலோடு மல்லுக்கட்டினாலும் வருடத்தில் சில முறைகளாவது குடும்பமாக ஒன்றாகி தங்களுக்கான சந்தோஷத் தருணங்களை பதிவு செய்து கொள்கின்றனர்.

ஹேப்பி வெகேஷன் வில் & ஃபேமிலி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com