சென்னையில் சின்னத்திரைத் தொகுப்பாளினி அனிஷா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சின்னத்திரைத் தொகுப்பாளினியாக உள்ள அனிஷா, கணவர் சக்தி முருகனுடன் இணைந்து சென்னை கே.கே. நகர் பகுதியில் ஸ்கை எக்யூப்மெண்ட் என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார். மின்சாதனப் பொருள்களை மொத்தமாக வாங்கி வியாபாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் கே.கே. நகர் பிரசாந்த் குமார் என்பவருடைய ஏசி நிறுவனத்தில் மொத்தமாக ரூ. 37 லட்சம் மதிப்புள்ள 104 ஏ.சி.க்களை விற்பனைக்காக வாங்கியுள்ளார்கள்.
இதற்கான பணத்தை இருவரும் நீண்ட நாளாகத் தராமல் இருந்துள்ளார்கள். இதன்பிறகு காசோலை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் பணத்தை மீண்டும் கேட்டுள்ளார் பிரசாந்த். ஆனால் பணம் தரமுடியாது என அனிஷா மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் கே.கே. நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பிரசாந்த்.
இதையடுத்து காவல்துறையினர், அனிஷா மற்றும் அவருடைய உறவினர் ஹரிகுமார் ஆகியோரைக் கைது செய்துள்ளார்கள். மேலும், சக்தி முருகன் நடத்தி வரும் டிராவல் ஏஜென்ஸியிலும் மோசடிகள் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள சக்தி முருகனைக் கைது செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!

குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு; ஷுப்மன் கில் விளையாடவில்லை!

வரலாறு காணாத கடனில் தமிழ்நாடு! பியூஷ் கோயல் பேட்டி | ADMK | BJP
நூறு சாமி டீசர்!
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


