சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

சர்கார் vs என்ஜிகே தீபாவளி மோதல் தவிர்ப்பு?: செல்வராகவனுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட என்ஜிகே படப்பிடிப்பு!

இயக்குநர் செல்வராகவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அதனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது...

News image
Updated On :26 ஜூலை 2018, 7:08 am

எழில்

எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகும் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் இணையும் என்ஜிகே படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்கள். இந்தப் படம் தீபாவளியன்று வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதேபோல ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படமும் தீபாவளியன்று வெளிவருவதால் இவ்விரு படங்களின் மோதலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

இந்நிலையில் திடீரென என்ஜிகே படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் செல்வராகவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அதனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து என்ஜிகே படம் தீபாவளிக்கு வெளியாகாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கிறிஸ்துமஸ் அல்லது பொங்கல் சமயத்தில் படம் வெளியாகவுள்ளதாகத் தற்போது கூறப்படுகிறது.

தன்னுடைய உடல்நிலை குறித்த செய்திகளுக்கு செல்வராகவன் விளக்கம் அளித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: நண்பர்களே, இது ஒரு சிறு மருத்துவப் பரிசோதனை நடைமுறைதான். நான் நலமாக உள்ளேன். என் வேலையை மீண்டும் தொடங்கியுள்ளேன். என்ஜிகே படப்பிடிப்பு சில நாள்களில் மீண்டும் தொடங்கும். என் மீது அக்கறை செலுத்தியவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார். இதையடுத்து தீபாவளியன்று சர்கார் படம் மட்டுமே பெரிய போட்டிகள் எதுவுமின்றி வெளியாகவுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.