2002-ல் வெளியான சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கி வருகிறார். பிரபுதேவா, நிக்கி கல்ராணி, செந்தில், பிரபு போன்றோர் இதில் நடிக்கிறார்கள்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று சமீபத்தில் நடைபெற்றது. இதில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்றார் நாட்டுப்புறக் கலைஞரான செந்தில் கணேஷ். இதையடுத்து ஏற்கெனவே வாக்குறுதி அளித்தபடி ஏ.ஆர். ரஹ்மான் இசையில் செந்தில் கணேஷ் பாடவுள்ளார். அதற்கு முன்பு, சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் சீமராஜா படத்தில் ஒரு பாடல் பாடி திரையுலகுக்கு அறிமுகமாகியுள்ளார் செந்தில் கணேஷ். இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை இசையமைப்பாளர் இமான் வெளியிட்டுள்ளார். யுகபாரதி எழுதியுள்ள பாடலை செந்தில் கணேஷ் பாடியுள்ளதாக இமான் அறிவித்துள்ளார்.
சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்துகொண்ட செந்திலின் மனைவி ராஜலட்சுமியால் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறமுடியவில்லை. எனினும் அவர் தற்போது திரைப்படப் பின்னணிப் பாடகியாகியுள்ளார்.
சார்லி சாப்ளின் 2 படத்தில் சின்ன மச்சான் செவத்த மச்சான் என்கிற அவர்களுடைய பாடலையே படத்திலும் பாடியுள்ளார்கள். அம்ரிஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் பாடலின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!

குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு; ஷுப்மன் கில் விளையாடவில்லை!

வரலாறு காணாத கடனில் தமிழ்நாடு! பியூஷ் கோயல் பேட்டி | ADMK | BJP
நூறு சாமி டீசர்!
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


