அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவரை நடிகை தமன்னா திருமணம் செய்யவுள்ளார் என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதற்கு நடிகை தமன்னா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விளக்கம் அளித்ததாவது:
ஒருநாள் நடிகர், மற்றொரு நாள் கிரிக்கெட் வீரர், தற்போது மருத்துவர். இதுபோன்ற வதந்திகள் எல்லாம் ஏதோ நான் கணவரைத் தேடிக் கடைகடையாக அலைவது போன்ற தோற்றத்தைத் தருகிறது. காதலில் வீழ்வது எனக்குப் பிடிக்கும் என்றாலும் என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ஆதாரமற்ற செய்திகளை ஆதரிக்க முடியாது. நான் இப்போது எந்த உறவிலும் இல்லாமல், மகிழ்ச்சியாக உள்ளேன். எனக்கான துணையை என் பெற்றோரும் தேடவில்லை.
என் சினிமா வேலையைத்தான் காதலித்துக் கொண்டிருக்கிறேன். நான் நடிப்பில் மும்முரமாக இருக்கும்போது எங்கிருந்து இதுபோன்ற வதந்திகள் கிளம்புகின்றன என்று எனக்கு ஆச்சர்யமாக உள்ளன. இதுபோன்ற செய்திகள் மரியாதைக்குறைவானவை. எப்போது திருமணம் செய்வேன் என்பதை நானே உலகுக்கு அறிவிப்பேன். என் திருமணம் இப்போதைக்கு இல்லை. இந்தச் செய்திகள் எல்லாமே யாரோ ஒருவருடைய கற்பனையாகும். வதந்திகள் நிறுத்தப்படவேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!

குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு; ஷுப்மன் கில் விளையாடவில்லை!

வரலாறு காணாத கடனில் தமிழ்நாடு! பியூஷ் கோயல் பேட்டி | ADMK | BJP
நூறு சாமி டீசர்!
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


