பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உதயநிதி, ப்ரியா பவானி சங்கர் மற்றும் இந்துஜா நடிக்கவிருந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

மலையாளத்தில் வெற்றி பெற்ற மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் தமிழ் மறு உருவாக்கமான ‘நிமிர்’

News image
Updated On :5 ஜூன் 2018, 7:51 am

ராக்கி

மலையாளத்தில் வெற்றி பெற்ற மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் தமிழ் மறு உருவாக்கமான ‘நிமிர்’ படத்தில் நடித்திருந்தார் உதயநிதி. ஆனால் அந்தப் படம் எதிர்ப்பார்த்த அளவு கவனம் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் தமன்னா, வடிவுக்கரசி, உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், உதயநிதி அட்லியின் உதவியாளர் இனோக் என்பவரின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ப்ரியா பவானி சங்கர், இந்துஜா ஆகியோரும் அவருடன் நடிப்பதாக இருந்தது. ஆனால் எதிர்ப்பாராத விதமாக தொடக்க நிலையிலேயே பெயரிடப்படாத அந்தப் படம் நிறுத்தப்பட்டது. அந்தப் படம் கைவிடப்பட்டதன் காரணத்தை இதுவரை படக்குழுவினர் தெரிவிக்கவில்லை. நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதாக முடிவு செய்துள்ள உதயநிதி கதை கேட்பதில் கவனம் செலுத்துகிறார் என்கிறது அவரது நெருங்கிய வட்டம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.