சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

வேற லெவல்?: சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் பட போஸ்டர்!

இந்தக் குழப்பத்தினால் விஜய் ரசிகர்கள் இன்றைய அதிகாரபூர்வ அறிவிப்பை வெகு ஆவலுடன்...

News image
Updated On :21 ஜூன் 2018, 7:33 am

எழில்

விஜய் - இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இது விஜய் நடிக்கும் 62-வது படம். மெர்சல் படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

படத்தின் தலைப்பும் போஸ்டரும் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விஜய் - முருகதாஸ் இணையும் இந்தப் படத்தின் தலைப்பு - வேற லெவல் என்கிற மாதிரியான போஸ்டர் ஒன்று இணையத்தில் நேற்று வெளியானது. இது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட போஸ்டரா அல்லது அசல் போஸ்டர் அதிகாரபூர்வமின்றி வெளியானதா என்றொரு குழப்பம் ஏற்பட்டது. இது முருகதாஸ் படத்தலைப்பு போல இல்லை, அட்லி படத்தலைப்பு போல உள்ளது என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தார்கள். இதையடுத்து அதே போஸ்டர் வடிவத்தில், இது டைட்டில் இல்லைடா என்றொரு போஸ்டரும் வெளியானது! இதுபோன்ற விளையாட்டுத்தனமான போஸ்டர்களால், இப்படத் தலைப்பும் போஸ்டரும் மீமாக மாற்றப்பட்டதுதான் மிச்சம். இந்தக் குழப்பத்தினால் விஜய் ரசிகர்கள் இன்றைய அதிகாரபூர்வ அறிவிப்பை வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.