விஜய்க்குப் பிறந்தநாள் பரிசளித்த ஏ.ஆர். முருகதாஸ்: மூன்று போஸ்டர்கள் வெளியீடு!
நடிகர் விஜய்யின் 62-வது திரைப்படத்துக்கு சர்கார்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை...


நடிகர் விஜய்யின் 62-வது திரைப்படத்துக்கு சர்கார்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கத்தி, துப்பாக்கி ஆகிய வெற்றிப் படங்களுக்கு பின் மீண்டும் விஜய் -முருகதாஸ் கூட்டணி இணைந்துள்ளதால், இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலெட்சுமி, ராதாரவி, யோகிபாபு, பழ. கருப்பையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை - ஏ.ஆர். ரஹ்மான். உதயா', அழகிய தமிழ் மகன்', மெர்சல்' படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக விஜய் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். இந்தப் படம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் பிறந்தநாளை (ஜூன் 22) முன்னிட்டு, படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...