குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களுக்கு கமல்ஹாசன் இரங்கல்!

'குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள்.
குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களுக்கு கமல்ஹாசன் இரங்கல்!
Updated on
1 min read

'குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்' என்று ட்விட்டரில் தனது இரங்கலைப் பதிவு செய்தார் கமல்ஹாசன்.

குரங்கணி தீ விபத்து சம்பவத்தை இனி ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதுகுறித்து அவர் கோவை செய்தியாளர்களிடம் கூறுகையில், 'குரங்கணி காட்டுத் தீ விபத்தில் துரிதமாக செயல்பட்ட அரசுக்கு பாராட்டு. மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் நல்ல முயற்சியை மேற்கொண்டனர். அனைத்து நேரத்திலும் அரசை விமரிசிப்பது சரியானது அல்ல. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன். சிகிச்சையின்போது உறவினர்கள், மருத்துவர்களுக்கு இடையூறு செய்யக் கூடாது. குரங்கணி தீ விபத்து சம்பவத்தை இனி ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தீ விபத்து நிகழ்வுகளை கொடூர பாடமாக அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உரிய பாதுகாப்புடன் மலையேற்ற பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். பேரிடர் முன்னெச்சரிக்கை அறிவிப்பை ஊடங்கள் விரிவாக வெளியிட வேண்டும். வனம் குறித்து நமது கவனம் குறைவாகவே உள்ளது. வனப்பகுதிக்கு சுற்றுலா செல்வோர் வனவிலங்குகளுக்கு இடயூறு செய்யக் கூடாது. 

வனப்பகுதி கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதோடு தண்ணீரை சேமிக்க வேண்டும். நாம் அனைவரும் தண்ணீரை சேமிக்க கற்றுக்கொள்ள வேண்டும். பவானியில் தடுப்பணை கட்டுவது குறித்து கேரள முதல்வரை சந்திப்பேன். ஜிஎஸ்டி வரி தவிர்க்க வேண்டும் என கூறவில்லை குறைக்கப்பட வேண்டும்என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com