பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

லண்டன் அருங்காட்சியகத்தில் 'கட்டப்பா' சத்யராஜுக்கு மெழுகுச் சிலை!

உலகப் புகழ்பெற்ற லண்டன் "மேடம் டுசாட்ஸ்' அருங்காட்சியகத்தில் பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜுக்கு...

News image
Updated On :12 மார்ச் 2018, 5:47 am

எழில்

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான "பாகுபலி' படத்தின் வசூல் இந்திய அளவில் குறிப்பிடத்தகுந்த சாதனையை நிகழ்த்தியது. பாலிவுட்டில் உருவாகும் படங்கள்தான் இவை போன்ற சாதனைகளை இதற்கு முன் நிகழ்த்தி இருந்தன. அச்சாதனைகளை உடைத்த தென்னிந்திய படம் என்ற பெயர் "பாகுபலி'க்குக் கிடைத்தது. இதனால் இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு நல்ல கவனம் கிடைத்தது. 

இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற லண்டன் "மேடம் டுசாட்ஸ்' அருங்காட்சியகத்தில் பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜுக்கு "பாகுபலி' கதாபாத்திர மெழுகுச் சிலை நிறுவப்படவுள்ளது. உலகின் செல்வாக்கு மிக்க கதாபாத்திரங்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் இந்த அங்கீகாரம், இதற்கு முன்பு பிரபாஸின் பாகுபலி கதாபாத்திரத்துக்கு கிடைத்தது. தற்போது கட்டப்பா கதாபாத்திரத்துக்கும் கிடைக்கவுள்ளது.

இச்செய்தி கிடைத்தவுடன் தமிழ்த் திரையுலகினர் சத்யராஜுக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.