பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

அமிதாப் பச்சனுக்கு உடல்நலக் குறைவு! மும்பையிலிருந்து ஜோத்பூருக்கு விரைந்த மருத்துவர்கள்!

அமிதாப் பச்சனுக்குத் திடீரென நேற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை...

News image
Updated On :13 மார்ச் 2018, 7:01 am

எழில்

ஜோத்பூரில் அமீர் கான் நடிப்பில் உருவாகி வரும் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பில் பங்குபெற்றுள்ள அமிதாப் பச்சனுக்குத் திடீரென நேற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தார்கள். மேலும் மும்பையிலிருந்தும் மருத்துவர்கள் ஜோத்பூருக்கு விரைந்துள்ளார்கள்.

இதையடுத்து, அமிதாப் பச்சனின் உடல்நலத்தை முன்னிட்டு அவர் இன்று தனி விமானத்தில் மும்பைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார். எனினும் அமிதாப் பச்சன் தன்னுடைய வலைத்தளத்திலும் ட்விட்டரிலும் இன்று பதிவுகள் எழுதியுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளார்கள். தான் ஓய்வு எடுத்துக்கொண்டு மேலும் தன் உடல்நிலை குறித்த தகவல்களைத் தெரிவிப்பதாக அமிதாப் பச்சன் கூறியுள்ளார். 

அமீர் கான் மற்றும் அமிதாப் பச்சன் என இரு ஹிந்திப் பிரபலங்கள் நடிக்கும் படம் - தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான். நடிகை கத்ரீனா கயிஃப்பும் இதில் நடிக்கிறார். இப்படத்தை விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்குகிறார். தூம் 3 படத்துக்குப் பிறகு அமீர்கானுடன் இணைந்து பணியாற்றுகிறார் விஜய் கிருஷ்ணா.

இப்படம் 2018 தீபாவளி அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.