பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

தரமணிக்குப் பிறகு?: வேதனையை வெளிப்படுத்திய நடிகை ஆண்ட்ரியா!

ஒரு நடிகையின் அந்தஸ்து அவர் எந்த நடிகருடன் நடிக்கிறார்கள் என்பதில்தான் உள்ளது என்று தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை ஆண்ட்ரியா...

News image
Updated On :13 மார்ச் 2018, 7:29 am

எழில்

ஒரு நடிகையின் அந்தஸ்து அவர் எந்த நடிகருடன் நடிக்கிறார்கள் என்பதில்தான் உள்ளது என்று தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

மகளிர் தின விழா ஒன்றில் பங்கேற்ற நடிகை ஆண்ட்ரியா கூறியதாவது:

தரமணி படத்தில் நடித்த எனக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. ஆனால் தரமணிக்குப் பிறகு இதுவரை ஒரு படத்தில்கூட நடிக்க ஒப்பந்தமாகவில்லை. என் நடிப்புக்கு உகந்தது போல கதை அமைத்துக்கொடுங்கள். கவர்ச்சியாக ஆடையணிந்து நடிப்பதிலேயே மகிழ்ச்சியடைந்து விடுவார் என எதிர்பார்க்காதீர்கள். ஆனால் விஜய் போன்ற நடிகர்களுடன் நடிக்கும் நடிகைக்கு உடனடியாக ஏராளமான படங்கள் கிடைக்கின்றன.

நயன்தாரா உள்ளிட்ட நடிகைகள், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் நடிக்கிறார்கள். ஆனால் அவர் நயன்தாராவாக நீடிக்க ரஜினி, விஜய், அஜித், சூர்யா படங்களில் நடிக்க வேண்டியுள்ளது. ஒரு நடிகையின் அந்தஸ்து அவர் எந்த நடிகருடன் நடிக்கிறார்கள் என்பதில்தான் உள்ளது. ரஜினியுடன் நடிக்கும் நடிகையை பெரிய கதாநாயகி என மக்கள் சொல்கிறார்கள். ஏன் இப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.