ஹைதராபாத்தின் மிகவும் விரும்பத்தக்க பெண் இவர் தான்.

டோலிவுட்டில் தொடர்ந்து தனது முத்திரைகளை வெற்றிகரமாகப் பதித்து வரும் பூஜா ஹெக்டே அடுத்து நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது அத்தனையும் பெரிய ஹீரோக்களுடன் மட்டுமல்ல மெகா பட்ஜெட் படங்களிலும் கூடத்தான். 
ஹைதராபாத்தின் மிகவும் விரும்பத்தக்க பெண் இவர் தான்.
Updated on
1 min read

பூஜா ஹெக்டேவைத் தெரியும் தானே?

மிஷ்கினின் ‘முகமூடி’ திரைப்படத்தில் வருவாரே? 

அப்புறம் மொகஞ்சதாரோவில் ஹிரித்திக் ரோஷனுக்கும் ஜோடியானார்.

அவர் இப்போது தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராகப் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

முகமூடிக்குப் பிறகு தெலுங்கில் நாகசைதன்யா ஜோடியாக இவர் நடித்த ‘ஒக்க லைலா கோசம்’ திரைப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் ஜோடியாக ‘துவ்வடா ஜகன்நாதம்’ திரைப்படத்திலும் நடித்த பின் இந்தியா முழுதும் அறியப்பட்ட நடிகையானார். தற்போது பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ் எனும் டோலிவுட் ஹீரோவுடன் சாக்‌ஷ்யம் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார் பூஜா. அது மட்டுமல்ல டோலிவுட்டையே மிகுந்த எதிர்பார்ப்பில் வைத்திருக்கும் ராம் சரண் தேஜாவின் பீரியட் திரைப்படமான ரங்கஸ்தலத்திலும் பூஜா சிறப்புப் பாடல் காட்சியொன்றில் நடித்து முடித்திருக்கிறாராம்.

டோலிவுட்டில் தொடர்ந்து தனது முத்திரைகளை வெற்றிகரமாகப் பதித்து வரும் பூஜா ஹெக்டே அடுத்து நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது அத்தனையும் பெரிய ஹீரோக்களுடன் மட்டுமல்ல மெகா பட்ஜெட் படங்களிலும் கூடத்தான். 

முதலாவதாக ஜூனியர் என் டி ஆரின் 28 வது திரைப்படத்திலும் ஹீரோயின் பூஜா தான்.

இரண்டாவதாக இயக்குனர் வம்ஷி பைத்தபள்ளி இயக்கத்தில் மகேஷ் பாபுவின் 25 ஆவது திரைப்படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல, மூன்றாவதாக சாஹூவுக்குப் பின் பிரபாஸ் நடிக்கவிருக்கும் திரைப்படமொன்றிலும் பூஜா ஹெக்டே தான் ஹீரோயின்.

அப்புறமென்ன ஹைதராபாத்தின் மிகவும் விரும்பத்தக்க பெண் எனும் போட்டியில் பூஜா ஹெக்டே ஜெயித்ததில் ஆச்சர்யமில்லை தானே?!

Image courtesy: india.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com