ஸ்ரீதேவி நடிக்கவிருந்த படத்தில் மாதுரி தீட்சித்!
அபிஷேக் வர்மன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஷித்தத் படத்தில் நடிக்க ஸ்ரீதேவி ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அவருடைய மறைவுக்குப் பிறகு...


நடிகை ஸ்ரீதேவி, உறவினரின் திருமணத்தில் பங்கேற்க துபை சென்றபோது, குளியல் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் கடந்த மாதம் 28-ஆம் தேதி துபையிலிருந்து மும்பைக்குக் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அபிஷேக் வர்மன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஷித்தத் படத்தில் நடிக்க ஸ்ரீதேவி ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அவருடைய மறைவுக்குப் பிறகு ஸ்ரீதேவி ஏற்றவிருந்த வேடத்தில் நடிக்க பிரபல நடிகை மாதுரி தீட்சித் ஒப்பந்தமாகியுள்ளார். இத்தகவலை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தெரிவித்துள்ளார்.
அபிஷேக் வர்மன் இயக்கும் படம் அம்மாவின் மனத்துக்கு மிக நெருக்கமானது. இந்தப் படத்தில் மாதுரி தீட்சித் நடிக்க ஒப்புக்கொண்டதற்காக அப்பா, நான், குஷி ஆகிய மூவரும் நன்றி கூறிக்கொள்கிறோம் என்று தகவல் கூறியதோடு ஸ்ரீதேவியும் மாதுரி தீட்சித்தும் இணைந்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...