5-வது வாரமாக புதிய தமிழ்ப் படம் எதுவும் வெளியாகவில்லை!
தமிழ்த் திரையுலகில் 5-வது வாரமாகப் புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் வெளியாகவில்லை...


தமிழ்த் திரையுலகில் 5-வது வாரமாகப் புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக மார்ச் 1 முதல் வேலை நிறுத்தம் செய்து வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். இதனால் மார்ச் 1 முதல் புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் வெளிவரவில்லை.
தொடர்ந்து பல வருடமாக நடைமுறையில் இருந்துவரும் மிக அதிகப்படியான கட்டணத்தை குறைக்க வேண்டி பல முறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு கேட்டும், கண்டுகொள்ளாத டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எந்த ஒரு புதிய தமிழ்த் திரைப்படத்தினையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் புதிய படங்கள் எதையும் திரையரங்குகளில் வெளியிடாமல் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகத்தில் மார்ச் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. 'பெப்சி' அமைப்பின் ஒப்புதலுடன் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இதை அறிவித்தது. மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தம், சினிமா நிகழ்ச்சிகளும், போஸ்ட் புரொடெக்சன் பணிகளும் நடைபெறாது என தமிழக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்தார். அதேபோல தமிழ்நாட்டில் திரைப்படப் படப்பிடிப்புகளும் எதுவும் தற்போது நடைபெறவில்லை.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 5-வது வாரமாக புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இன்று, ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தலா ஒரு படம் புதிதாக சென்னையில் வெளியாகியுள்ளது. இந்த வாரம் விடுமுறை தினங்கள் கிடைத்தும் அதைத் தமிழ்த் திரையுலகம் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போய்விட்டது. வேலை நிறுத்தத்தை முடித்துக்கொள்ள பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடந்தும் அதற்குரிய பலன் இதுவரை கிடைக்கவில்லை.
திரைத்துறையினரின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக, அரசு தலையிடாத வரையில் இப்பிரச்னைக்குத் தீர்வு காண வழியில்லை என்று 'பெப்சி' அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...