நடிகை டாப்ஸியிடம் காதலைச் சொன்ன நெட்டிசன்! கலாய்த்த மற்ற ரசிகர்கள்!

ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என தற்போது இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும்
நடிகை டாப்ஸியிடம் காதலைச் சொன்ன நெட்டிசன்! கலாய்த்த மற்ற ரசிகர்கள்!
Published on
Updated on
2 min read

ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என தற்போது இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கத் தொடங்கிவிட்டனர். ட்விட்டர் பக்கம் இதுவரையில் இல்லாதவர்கள் கூட போட்டிகளை சமாளிக்க முடியாமல் அட்மின் வைத்தாவது தனக்கொரு பக்கத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். பாலிவுட் பிரபலங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஷோபிஸ் என அழைக்கப்படும் சினிமா உலகில் எந்தளவுக்கு அடிக்கடி மீடியாவிலும் மக்கள் முன்னிலையிலும் காட்சித் தருகிறார்களோ அந்தளவுக்கு அவர்களது மார்க்கெட் உறுதியாகும்.

நடிகைகள் தங்களுடைய கருத்துக்களைக் கூறுவதுடன் புகைப்படங்களையும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தாமே நேரடியாக பகிர்ந்தும் வருகின்றனர். நடிகை பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், கத்ரீனா கயப், அனுஷ்கா உள்ளிட்ட பல நடிகைகள் தினந்தோறும் போடும் பதிவுகளைப் படிக்க பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதில் நடிகை டாப்ஸி பன்னுவும் அடிக்கடி தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். 

நடிகைகள் மட்டும் என்றில்லாமல் அனைத்து பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளைக் குறித்து டாப்ஸி பேசி அதற்கு காரணமானவர்களை தண்டிக்கப் பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். தனது காதல் வாழ்க்கை மற்றும் வருங்கால கணவர் எப்படியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ‘பொய் பேசாதவராக இருக்க வேண்டும்’ என்பது போன்ற பல நிபந்தனைகள் தெரிவித்திருந்தார். அதைப் படித்த ரசிகர் ஒருவர் டாப்ஸிக்கு லவ் அப்ளிகேஷனை ட்விட்டர் கமெண்ட் பக்கத்திலேயே அனுப்பியிருக்கிறார். அதில் தன்னைப் பற்றி விவரித்து டாபிஸியைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

‘ஹலோ டாப்ஸி, உங்களை நான் காதலிக்கிறேன். என்னை மணந்து கொண்டு என் வாழ்நாள் துணைவியாக நீங்கள் இருப்பீர்களா? நான் கற்புநெறி தவறாத ஆண்மகன், குடிப்பழக்கம் கிடையாது, சைவ உணவுதான் சாப்பிடுவேன். போதை பழக்கம் உள்ளதா என்பதை நீங்கள் நார்கோ டெஸ்ட் செய்து அறிந்து கொள்ளலாம், பொய் பேச மாட்டேன் என்பதை லை டிடெக்டர் மூலமும் செக் செய்து கொள்ளுங்கள். இவ்வளவு ஏன்? பிரைன் மேப்பிங் டெஸ்ட்டுக்கும் நான் தயார்’ என அந்த ரசிகர் உருக்கமாக தன் காதலை வெளிப்படுத்தியிருந்தார். 

இதற்கு பதிலாக ‘ட்விட்டரில் திருமண அழைப்பு விடுத்துள்ள இவருக்கு கண்டிப்பாக பிரைன் மேப்பிங் டெஸ்ட் செய்தாக வேண்டும்’ என்று கலாய்த்துள்ளனர் மற்ற ரசிகர்கள். 

மற்ற ரசிகர்கள். இன்னொரு ரசிகர் கொந்தளித்து டாப்ஸியிடம், ‘அந்த நபரை நீங்கள் திருமணம் செய்வீர்களா? மாட்டீர்களா? எனக் கேட்டிருக்கிறார். ரசிகர்களின் இந்த ட்விட்டர் தகவல்களை பகிர்ந்திருக்கும் டாப்ஸி, ‘வாழ்க்கையில் உங்களுக்கு (விண்ணப்பம்போட்ட ரசிகர்) இதைவிட வேறென்ன வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். ஆனால் திருமணம் செய்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com