எழுத்தாளர் சாரு நிவேதிதா நடிகை கஸ்தூரி இருவரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்களா?

பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் 2 வையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கிறார்
எழுத்தாளர் சாரு நிவேதிதா நடிகை கஸ்தூரி இருவரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்களா?
Published on
Updated on
1 min read

பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் 2 வையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்ற செய்தி சானல் தரப்பிலிருந்து வெளிவந்தது.

100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கவிருக்கும் பங்கேற்பாளர்கள் யாரென ரசிகர்கள் அறிந்து கொள்ள ஆவலாக உள்ள நிலையில் அந்தப் பட்டியல் அண்மையில் வலைத்தளங்களில் வெளியானது. அதில் நடிகை கஸ்தூரி மற்றும் எழுத்தாளர் சாரு நிவேதிதா ஆகிய இருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர்களைத் தவிர நடிகை இனியா, ராய் லட்சுமி, லட்சுமி மேனன், ஜனனி ஐயர், சொர்ணமால்யா, பூனம் பாஜ்வா, ப்ரியா ஆனந்த், நந்திதா, ஆலியா மானசா, ரக்‌ஷிதா, கீர்த்தி சாந்தனு, நடிகர்கள் பரத், ஷாம், சாந்தனு, அசோக் செல்வன், ஜித்தன் ரமேஷ், ஜான் விஜய், படவா கோபி, பவர் ஸ்டார், ப்ரேம்ஜி, யூகி சேது, விஜய் வசந்த், பால சரவணன், ப்ளாக் பாண்டி, தாடி பாலாஜி, டேனியல் ஆனி போப், அமித் பார்கவ், நாஞ்சில் சம்பத் எனத் தொடரும் இந்தப் பட்டியலில் 15 பேர்கள்தான் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் கூறப்படுகிறது. ஆனால் இந்நிகழ்ச்சி ஜூலை 17-ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

பிக் பாஸ் 2 இந்த நிகழ்ச்சி குறித்த விளம்பரத்துக்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில் நிகழ்ச்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com