வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இந்தியாவில் அதிக வசூல் கண்ட ஹாலிவுட் படம்: 200 கோடியைத் தாண்டியது ‘அவெஞ்சர்ஸ்’ வசூல்!

இந்தியாவில் ரூ. 200 கோடி வசூலித்த முதல் ஹாலிவுட் படம் என்கிற பெருமையையும் அவெஞ்சர்ஸ் படம் பெற்றுள்ளது...

News image
Updated On :14 மே 2018, 11:00 am

ராபர்ட் டெளனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ருஃபல்லோ நடிப்பில் ஆந்தோனி ரூஸோ, ஜோ ரூஸோ இயக்கியுள்ள அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (Avengers: Infinity War) படம் சமீபத்தில் வெளியானது. அவெஞ்சர்ஸ் படத்தின் மூன்றாம் பாகம் இது. இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் இந்தியாவில் வசூல் மழை பொழிந்து வருகிறது. முதல் வாரம் ரூ. 157 கோடி, அடுத்த வாரம் ரூ. 47 கோடி என வசூலித்ததுள்ளது. மூன்றாவது வார இறுதியில் இப்படத்துக்கு ரூ. 10 கோடி வசூல் கிடைத்துள்ளது. இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் சேர்த்து நேற்றுவரை (வரிகள் நீங்கலாக) ரூ. 214 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் பல புதிய சாதனைகளை இந்தப் படம் படைத்துள்ளது. 

இதற்கு முன்பு இந்தியாவில் அதிகம் வசூலித்த படம் - தி ஜங்கில் புக். அந்தப் படம் மொத்தமாக ரூ. 261 கோடியும் வரிகள் நீங்கலாக ரூ. 188 கோடியும் வசூலித்தது. இந்நிலையில், இந்தியாவில் அதிகம் வசூலித்துள்ள ஹாலிவுட் படம் என்கிற சாதனையைப் படைத்துள்ளது அவெஞ்சர்ஸ். இப்படத்தின் வசூல் தற்போது ரூ. 225 கோடியை நெருங்கியுள்ளது. மேலும், இந்தியாவில் ரூ. 200 கோடி வசூலித்த முதல் ஹாலிவுட் படம் என்கிற பெருமையையும் அவெஞ்சர்ஸ் படம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.