கேன்ஸ்' திரைப்பட விழாவில் முகம் சுளிக்க வைத்த பிரபல மாடல் அழகி!

கேனஸ் திரைப்பட விழா, பிரான்ஸிலுள்ள கேன்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. மே 8-ம் தேதி தொடங்கிய இவ்விழா
கேன்ஸ்' திரைப்பட விழாவில் முகம் சுளிக்க வைத்த பிரபல மாடல் அழகி!

பிரான்ஸில் கேனஸ் திரைப்பட விழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. மே 8-ம் தேதி தொடங்கிய இவ்விழா 19-ம் தேதி நிறைவு பெறும். இந்தகோலாகலமான திரை விழாவில் கலந்து கொள்ள உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறை பிரபலங்களும் ஆர்வத்துடன் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் இந்த விழாவின் ரெட் கார்பெட் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரபல மாடல் அழகி, உள்ளாடை அணியாமல் தனது உடல் தெரியும்படியாகக் ட்ரான்ஸ்பரெண்ட் உடை அணிந்து வந்து பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துவிட்டார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல டிவி நடிகை மற்றும் மாடலுமான கெண்டால் ஜென்னர் தான் அவர்.

பொது நிகழ்ச்சிகளுக்கு இத்தகைய கவர்ச்சி உடையில் ஜென்னர் வருவது இது முதல் முறையல்ல என்றாலும், இந்த உடை சர்ச்சைக்குரியதாகிவிட்டது. ஆனாலும் அவரது ரசிகர்கள் அவரின் உடையலங்காரத்தை பாராட்டியுள்ளனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பெஸ்ட் ப்யூட்டி லுக் யாருடையது என்று ஒரு பக்கம் மீடியாக்கள் போட்டி வைத்துக் கொண்டிருக்கின்றனராம்.

இது ஒரு பக்கம் இருக்க, திரையுலகில் காலம் காலமாக நிலவும் பாலின பாகுபாட்டை எதிர்த்து கேன்ஸ் திரைப்பட விழாவில் பல பெண் இயக்குனர்கள் மற்றும் நடிகைகள் குரல் கொடுத்தனர். கேன்ஸ் விழா குறித்து பல கேள்விகளை எழுப்பிய அவர்கள், பெண் இயக்குநர்களின் திரைப்படங்கள் அதிகளவில் திரையிடப்படுவதில்லை என்று போராட்டம் நிகழ்த்தினர். 

ஒரு பக்கம் கவர்ச்சி ஆடை, இன்னொரு பக்கம் பாலியல் குற்றச்சாட்டுகள், பிறிதொரு பக்கம் உரிய அங்கீகாரம் கிடைக்காத நிலை என பெண் படைப்பாளிகள் சிதறுண்டு கிடக்கிறார்கள். கேன்ஸ் திரைவிழா இது குறித்த பாதிப்புக்கள் ஏதுமின்றி வழமையாக நடந்து கொண்டிருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com