ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக அறிமுகமாகும் அரசியல் படம் 

பிரபல வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளரும், நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி கதை, திரைக்கதை எழுதி ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published On :

சென்னை: பிரபல வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளரும், நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி கதை, திரைக்கதை எழுதி ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘எதிர்நீச்சல்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் ஆர்.ஜே. பாலாஜி. பின்னர் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘வடகறி’, ‘தேவி’, ‘காற்று வெளியிடை’, ‘ஸ்பைடர்’, ‘வேலைக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.

அத்துடன் தற்பொழுது கீ’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘யங் மங் சங்’, ‘விசுவாசம்’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி கதை, திரைக்கதை எழுதி ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ஆர்.ஜே. பாலாஜி அரசியலில் இறங்கப் போவதாகவும், தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும்  ஒரு தகவல் வெளியானது. அத்துடன் அவரை வரவேற்று சுவர் விளம்பரம், கட்சிக்கொடி என வரிசையாக வெளியானது. இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது.

ஆனால் தற்பொழுது அது ஒரு படத்துக்கான விளம்பரம் என தெரியவந்தது. ‘எல்.கே.ஜி.’ என்று அந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. அரசியல் விமர்சனப் படமாக உருவாக உள்ளதோ என்று என்னும்படி படங்கள் அமைந்துள்ளன. ஹீரோவாக பாலாஜி நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார்.

Story image

புதுமுக இயக்குனர் பிரபு இயக்கும் இந்த படத்தினை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி எடிட் செய்கிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைப்பை கவனத்துக்கு கொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.