விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

துப்பாக்கிச்சூட்டில் நற்பணி மன்ற நிர்வாகி மரணம்: தனுஷ் வேதனை!

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் தனுஷ் நற்பணி மற்ற நிர்வாகி ஒருவரும் மரணமடைந்துள்ளார்...

News image
Updated On :24 மே 2018, 10:36 am

எழில்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டபோது கலவரம் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு, போலீஸ் தடியடியில் 60-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். கல்வீச்சில் 15 காவல்துறையினருக்குக் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் இந்தத் துப்பாக்கிச்சூட்டில் தனுஷ் நற்பணி மற்ற நிர்வாகி ஒருவரும் மரணமடைந்துள்ளார். இதுகுறித்து நடிகர் தனுஷ் ட்வீட் செய்ததாவது: 

துப்பாக்கிச் சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S.ரகு (எ) காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பியின் குடும்பத்தினரைச் சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.