

'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று' போன்ற படங்களைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவின் தயாரிப்பில் உருவான படம் 'அருவி'. அருண் பிரபு இயக்கிய இந்தப் படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன் போன்றோர் நடித்தார்கள். இசை - பிந்து மாலினி & வேதாந்த் பரத்வாஜ். படவிழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. சிறிய பட்ஜெட்டில் உருவான படமாக இருந்தாலும் தமிழகம் முழுக்க நல்ல வசூலையும் பெற்றது. இதனால் அருண் பிரபுவின் அடுத்தப் படம் குறித்த ஆர்வம் மேலும் அதிகமானது.
இந்நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான 24ஏஎம் ஸ்டூடியோ தயாரிப்பில் தனது அடுத்தப் படத்தை இயக்கவுள்ளார் அருண் பிரபு. இதுபற்றிய அறிவிப்பை தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா வெளியிட்டுள்ளார். குமுளி லோயர் கேம்ப் பகுதியில், இயற்கையான சூழலின் நடுவே இப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.
நடிகர்கள் உள்ளிட்ட படக்குழு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.