ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

யுவன் சங்கர் ராஜாவின் நண்பர்கள் மீது இயக்குநர் சுசீந்திரன் குற்றச்சாட்டு!

யுவனுடன் நான் பணியாற்ற முடியாத சூழ்நிலைக்கு காரணம், இப்போது யுவனைச் சுற்றியுள்ள நண்பர்கள்தாம்...

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:11 pm

எழில்

வெண்ணிலா கபடி குழு, போன்ற விளையாட்டை மையமாக கொண்ட படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் தற்போது சாம்பியன் என்கிற கால்பந்தை மையமாகக் கொண்ட படத்தை இயக்கவுள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ரோஷன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மிருணாளினி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.கே. ரெட்டி, அஞ்சாதே நரேன், ஆர்.கே. சுரேஷ், ஜெயபிரகாஷ், ஹரிஷ் உத்தமன் போன்றோர் நடிக்கிறார்கள். 

அரோல் கொரேலி இசையில், சுஜித் சாரங் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படம் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் விஜயனின் ஆலோசனையின்படி உருவாகவுள்ளது. சாம்பியன் படம் டிசம்பரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாம்பியன் படத்தில் யுவன் சங்கர் ராஜாவுடன் பணிபுரிய இருந்ததாகவும் ஆனால் அவருடைய புதிய நண்பர்களால் அந்த வாய்ப்பு பறிபோனதாகவும் இயக்குநர் சுசீந்திரன் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

யுவன் ஷங்கர் - உடன் சாம்பியன் படத்தில் நான் பணியாற்ற முடியவில்லை. யுவன் ரசிகர்களுக்கு எனது வருத்ததை தெரிவித்துக் கொள்கிறேன். யுவனுடன் நான் பணியாற்ற முடியாத சூழ்நிலைக்கு காரணம், இப்போது யுவனைச் சுற்றியுள்ள நண்பர்கள்தாம் (புதிய நண்பர்கள்) காரணம். இந்தத் தகவலைக்கூட என்னால் யுவனிடம் கூறமுடியவில்லை. வருங்காலத்தில் உறுதியாக நான் யுவனுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் என்று கூறியுள்ளார்.

சுசீந்திரன் இயக்கிய நான் மகான் அல்ல, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர் ஆகிய படங்களுக்கு யுவன் இசையமைத்துள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.