கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இவ்வளவு சீக்கிரம் 96 படத்தை சன் டிவியில் ஒளிபரப்புவது நியாயமில்லை: நடிகை த்ரிஷா அதிரடி!

இந்நிலையில் 96 படத்தை இவ்வளவு சீக்கிரம் டிவியில் ஒளிபரப்பாவது நியாயமில்லை எனப் படக்குழுவினர் கருதுகிறோம்...

News image
Updated On :3 நவம்பர் 2018, 6:00 am

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் - 96. சமீபத்தின் வெளியான இந்தப் படம் மக்களின் வரவேற்போடு இன்னமும் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.

படம் வெளியான 33 நாள் கழித்து சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது இந்தப் படம். இத்தகவல் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 96 படத்தைத் திரையரங்கில் பார்க்க முடியாதவர்களுக்கும் மீண்டும் பார்க்கத் துடிப்பவர்களுக்கும் சர்கார் டிக்கெட் கிடைக்காமல் இருப்பவர்களுக்கும் இந்தத் தகவல் ஆறுதலை அளிப்பதாக ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவு எழுதியுள்ளார்கள்.

தீபாவளி தினத்தன்று மாலை 6.30 மணிக்கு 96 படம் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

இது 5-வது வாரம். இப்போதும் அனைத்துத் திரையரங்குகளில் 80% கூட்டம் வருகிறது. இந்நிலையில் 96 படத்தை இவ்வளவு சீக்கிரம் டிவியில் ஒளிபரப்பாவது நியாயமில்லை எனப் படக்குழுவினர் கருதுகிறோம். 96 பட ஒளிபரப்பை பொங்கலுக்குத் தள்ளிவைக்கவேண்டும் என சன் டிவியை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும், சன் டிவியின் 96 பட ப்ரீமியர் ஒளிபரப்புக்குத் தடை விதிக்கவேண்டும் என்று ஆங்கிலத்தில் ஹேஷ்டேக் அமைத்து ட்வீட் செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.