சர்கார் படத்தின் பெரிய வெற்றியை நேற்றுக் கொண்டாடியிருக்கிறது அப்படத்தின் படக்குழு.
விஜய் நடித்து சமீபத்தில் வெளியான சர்கார் படம் முதல் நான்கு நாள்களில் ரூ. 150 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது. இந்நிலையில் சர்கார் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நேற்று கொண்டாட்ட நிகழ்வு நேற்று நடைபெற்றது. விஜய், ஏ.ஆர். முருகதாஸ், ஏ.ஆர். ரஹ்மான், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்ட படக்குழுவினர் இதில் கலந்துகொண்டார்கள். இந்தக் கொண்டாட்டத்தில் வித்தியாசமான கேக் ஒன்று வெட்டப்பட்டது. அதில், சர்கார் படத்திலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட காட்சியை நினைவுபடுத்தும்வகையில் மிக்ஸி, கிரைண்டர் ஆகிய மாதிரிகள் கேக்கில் இடம்பெற்றிருந்தன.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். சர்கார் படத்தில், தமிழக அரசின் இலவசப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினார்கள். பிறகு சர்கார் படம் மறு தணிக்கை செய்யப்பட்டு, சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டதால், சர்கார் படப் பிரச்னை முடிவுக்கு வந்து விட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். இனி அதிமுகவினர் போராட்டம் எதுவும் செய்ய மாட்டார்கள். நடிகர் விஜய்க்கும், தங்களுக்கும் இடையே எந்தப் பிரச்னையும் கிடையாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


