வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

96 & ராட்சசன் படங்கள்: இயக்குநர் ஷங்கர் பாராட்டு

தனிப்பட்ட முறையில் இந்தப் படத்துடன் உங்களால் ஒன்றிணைய முடியும். அதுதான் இப்படம் செய்யும் மாயம்...

News image
Updated On :15 அக்டோபர் 2018, 4:45 am

எழில்

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் - 96. 

விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் முண்டாசுப்பட்டி பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - ராட்சசன். இசை - ஜிப்ரான்.

சமீபத்தில் வெளியான இவ்விரு படங்களையும் பார்த்துவிட்டு, பாராட்டு தெரிவித்துள்ளார் இயக்குநர் ஷங்கர். ட்விட்டரில் அவர் கூறியதாவது: 

96 - தனிப்பட்ட முறையில் இந்தப் படத்துடன் உங்களால் ஒன்றிணைய முடியும். அதுதான் இப்படம் செய்யும் மாயம். விஜய் சேதுபதி அற்புதமாக நடித்துள்ளார். த்ரிஷாவைக் காண்பது உற்சாகமாக உள்ளது. பிரேம்குமாருக்கு வாழ்த்துகள். 

ராட்சசன் - இன்னொரு சுவாரசியமான படம். இயக்குநர் ராம்குமாரின் பெயர் வருகிறபோது பார்வையாளர்கள் கைத்தட்டுவதைக் காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் அதற்குத் தகுதியானவர் என இரு படங்களையும் பாராட்டியுள்ளார்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.