புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

அனுமதி வாங்கிக்கொண்டு செல்ஃபி படம் எடுத்திருக்கலாம்: நடிகர் சிவக்குமார் விளக்கம்

எத்தனையோ பேருக்கு செல்போனில் புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்திருக்கிறேன்...

News image
Updated On :30 அக்டோபர் 2018, 6:26 am

தனியார் மருத்துவமனை தொடர்பான விழா ஒன்றில்  நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டபோது அவருடன் இணைந்து செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டார்.  இந்த விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியான நிமிடம் முதல் சிவக்குமாரின் நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்ந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகர் சிவக்குமார் தெரிவித்ததாவது:

உங்களுடன் சேர்ந்து ஒரு செல்பி எடுத்துக்கொள்கிறேன் என்று அனுமதி வாங்கினால் என்ன? விஐபி என்கிறவர் நீங்கள் சொன்னபடி நிற்கவேண்டும்,  சொன்னபடிக் கேட்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்விதத்தில் நியாயம்? விமான நிலையங்களிலும் திருமண விழாக்களிலும் எத்தனையோ பேருக்கு செல்போனில் புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்திருக்கிறேன். 

நான் புத்தன் அல்லன். நானும் மனிதன் தான். என்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் கதாநாயகன் தான். ஆனால் அடுத்தவர்களை எந்த அளவுக்கு நாம் துன்புறுத்துகிறோம் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கவேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.